அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. MRI (மூலக்கதிர் புகைப்படம்) பரிசோதனைக்கு நேர்ந்தபோது, ஒரு முதியவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக, அவர் அணிந்திருந்த தடிமனான உலோகச் சங்கிலி என்றுகூறப்படுகிறது. பொதுவாக, MRI சோதனைகளின் போது புவியீர்ப்பு சக்தியைவிட பலமுடைய காந்தவலுவைக் கொண்ட இந்த இயந்திரத்தில், உலோகப் பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அந்த சங்கிலி உடலிலிருந்ததால், இயந்திரத்தின் விசை மூலம் அவர் அதற்குள் இழுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நியூயோர்க் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஊடகங்கள் இந்த சம்பவத்தை தீவிர கவனத்துடன் வெளியிட்டு வருகின்றன.
மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளன. உயிரியியல் மற்றும் காந்தச் சோதனைகளின் போது கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் மேலும் வலியுறுத்தப்படுகிறது.