நாட்டின் பல பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) 75 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மொத்தமாக சப்ரகமுவ மாகாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் 75 மில்லிமீற்றரை எட்டக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில், மணித்தியாலத்திற்கு 50–60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், நாட்டின் மற்ற பகுதிகளில் 30–40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.