அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் திருமதி எரோஷினியை சமீபத்தில் கல்வி அமைச்சில் சந்தித்து, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தொடர்பான முக்கிய விடயங்களை கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கான வசதிகள் இருந்தும் கல்வி அமைச்சால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் பயிற்சிக்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக முன்வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்வி அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடம் கல்வி வளர்ச்சி மற்றும் ஆசிரியர் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஆணையாளர் திருமதி எரோஷினி, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி தொடர்பான விடயங்களும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மீள ஆரம்பிக்கப்படும் என்றும், பயிற்சிக்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின் தொகை விரைவில் அதிகரிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த முயற்சி, பிரதேசங்களில் கல்வி மற்றும் தரமான ஆசிரியர் உருவாக்கத்திற்கு பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.