மட்டக்களப்பில் துறைநீலாவனையில் அமைந்துள்ள Central விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நாகேந்திரன் நினைவுக்கிண்ணம் 2025 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் பல அணிகளை பின்னுக்கு தள்ளி, இறுதிப் போட்டியில் பதிலடிகள் போட்டு எதிரிகளைச் சீர்குலைத்த அட்டாளைச்சேனை சோபர் அணி, வெற்றி கிண்ணத்தையும் ரூ.50,000 பரிசுத் தொகையையும் வென்றது.
போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரராக முத்திரை பதித்த சோபர் அணியின் முபாரிஸ் முபா (Mufaris Mufa), அதிகூடிய ஓட்டங்கள், அதிக 6 ஓட்டங்கள் அடித்ததோடு, இறுதிப்போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதையும் தட்டிச்சென்றார்.