Top News
| 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய 62 வயதுடையவர் கைது | | 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி |
Jul 26, 2025

முழுக் கடனும் அடைப்பட்ட பின் எரிபொருள் மீதான 50 ரூபா வரி நீக்கப்படும்

Posted on July 22, 2025 by Admin | 80 Views

முந்தைய அரசாங்கத்தின் போது இலங்கை திறைசேரியால் கைப்பற்றப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கடனை திருப்பிச் செலுத்தும் பணியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ரூ.884 பில்லியனாக இருந்த கடனில் பாதி தொகை ஏற்கனவே திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள தொகையும் முழுமையாக செலுத்தப்பட்டவுடன், எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த வரி, CPC நிறுவனத்தின் கடனை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியது என்று அவர் கூறினார். தற்போது நிலையான அரசாங்க வரிகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

எஸ்.ஜே.பி. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, அமைச்சர் ஜெயக்கொடி இதனைத் தெரிவித்தார்.

“CPC கடனை முழுமையாக அடைக்கவைத்த பின்பே, எரிபொருள் மீதான 50ரூபா வரியை நீக்குவது குறித்து அரசு பரிசீலனை மேற்கொள்ளும்,” என அவர் தெரிவித்தார்.