அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2025 ஜூலை 20 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை அதிபர் ஏ. முகம்மட் அஸ்மி தலைமையில் இடம்பெயர்ந்தது.
இந்த விழாவில் 2024 ஆம் ஆண்டு GCE A/L பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றிய எட்டு மாணவர்களும், இரண்டாவது முறையாக தோற்றிய இரண்டு மாணவர்களும் உட்பட மொத்தம் பத்து மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி சாதனையை பாராட்டும் வகையில், விழாவுக்கு தலைசிறந்த கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
விழாவின் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம். றஹ்மத்துல்லா (Naleemi) கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பிரதி பணிப்பாளர் எச்.பி. அனீஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் இல்முடீன் அபூபக்கர், கலாநிதி அஷ்ஷேஹ் எம்.எஸ். றிஸாட் (ஷஹ்வி, றியாதி), அல்-மினா பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம். அஸ்லம் சஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் மாணவர்களுக்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டலில் பங்கு கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகம் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் வெற்றிக்கு உற்சாகம் அளித்தனர். இந்த கௌரவிப்பு விழா, உயர்தரப் பிரிவின் வலயத் தலைவர் அஷ்ஷேஹ் எம்.ஏ. முபீன் ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது