நாட்டில் ஆண்களின் தொகை தொடர்ந்து குறைந்து வருவதைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக, வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, 1995ஆம் ஆண்டு 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 93.7ஆகக் குறைந்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு காரணமாக, பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்கள் பிறக்கும் விகிதத்தின் உயர்வு மற்றும் இளம் ஆண்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர், “பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற சில துறைகளைத் தவிர, பெரும்பாலான கல்வி மற்றும் தொழில் துறைகளில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது பாலின சமநிலையை பாதிப்பதோடு, தொழிலாளர் சந்தையில் இடர்பாடுகளை உருவாக்கக்கூடும். குறிப்பாக ஆண்கள் மட்டுமே அதிகம் ஈடுபடும் தொழில்களில் ஆண்களின் குறைபாடு ஒரு பெரும் சவாலாக மாறும்,” என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு எதிராக அரசு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.