அக்மீமன வலஹண்டுவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொன்று வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது அக்காவின் காதலனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சோக சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில், 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். குறித்த நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுடன் காதல் தொடர்பில் இருந்தவராகும். சம்பவத்தன்று, அவர் சிறுமியின் வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்கு வந்த பின்னர் சிறுமியின் அக்கா வெளியே சென்ற நிலையில், குறித்த நபரும் வெளியில் சென்றார். ஆனால், சில நிமிடங்களில் திரும்பிய அவர், தனது மொபைல் சார்ஜரை மறந்துவிட்டதாகக் கூறி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து முறையீடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்து, சந்தேகநபரைக் கைது செய்தனர். சிறுமி காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதிசெய்யப்பட்டது.
சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.