உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னாலுள்ள உண்மையை வெளியிட வேண்டும் எனக் கடும் கோரிக்கையுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் இன்று (23) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள அந்த ‘பிக் பொஸ்’யார்?” என்ற கேள்வியை நேரடியாக முன்வைத்தார்.
அத்துடன், இராணுவத்தின் முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனை மேற்கொண்ட குற்றவாளிகள் யார்? திட்டமிடுபவர்கள் யார் ?என்பதைக் கண்டறிந்து, அவர்கள் யார் என்பதையும் நாடாளுமன்றத்திலும், மக்களிடமும் வெளிக்கொணர வேண்டும் என்றார்.
“இந்த பயங்கரவாதம் யாரால் உருவாக்கப்பட்டது? யார் திட்டமிட்டது? மற்றும் அந்த சதியை மறைந்தபடி இயக்கிய நபர் யார்?” எனக் கேட்ட அவர், நாட்டு மக்களின் நம்பிக்கையை மீட்பது அரசின் கடமை என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தின் போது, அவர் இந்த உரையை நிகழ்த்தியிருந்தார்.