மட்டக்களப்பில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக, மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவு கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளது.
இந்த அதிகாரி, வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை, சாய்ந்தமருது குண்டுவெடிப்பு உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய விசாரணைகள் தொடர்பாக முக்கிய தகவல்களை மறைத்தல், விசாரணைகளில் தவறான தகவல்களை வழங்கல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். அவசியம் ஏற்பட்டால், அவரை மேலும் தடுத்து வைக்கவும் விசாரணையை தொடரவும் நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது