உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு கொண்ட நாடுகளின் பட்டியல் 2025 ஆம் ஆண்டுக்கானது தற்போது வெளியாகியுள்ளது. இதில் அண்டோரா முதலிடத்தைப் பிடித்து, உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசை, உலகளவில் பயனாளர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் “நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்” (Numbeo Safety Index) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமான் உள்ளிட்ட மூன்று மத்திய கிழக்கு நாடுகள், குற்றவியல் விகிதங்கள் குறைவு, வலுவான பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக முதல் நிலையிலுள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இலங்கை 59ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது ஒரு மேம்பாடாகவே கருதப்படுகிறது, எனினும் இன்னும் மேம்பாட்டு தேவைகள் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பட்டியலின் இறுதியில், வெனிசுவேலா உள்ளது. வெறும் 19.3 புள்ளிகள் மட்டுமே பெற்ற இந்த நாடு, குற்றச்செயல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு சவால்களில் தம்மை மீட்டெடுக்க முடியாத நிலையில் உள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மிகவும் மோசமான பாதுகாப்பு கொண்ட 10 நாடுகள்:
இந்த தரவுகளுக்கான அடிப்படை பொது மக்கள் தங்களே வழங்கும் கருத்துக்களிலிருந்து பெறப்படுகிறது. குற்றவியல் விகிதங்கள், தனி நபர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சவால்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வுகள் உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பீட்டில் கருதப்படுகின்றன.
இக்கணக்கெடுப்புகள், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் உணர்வுகளையும், பாதுகாப்பு தொடர்பான அவர்களது நேரடி அனுபவங்களையும் பிரதிபலிக்கின்றன.