2022ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை, அரசாங்கத்தை எதிர்த்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டங்களை தடைசெய்வதற்காக எடுத்ததாக விரிவான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 23) முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், அந்த அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறியதாக தெரிவித்துள்ளது.