இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நட்புறவு 55 ஆண்டுகளின் நீடித்த பயணத்தை கொண்டாடும் வகையில், “VIET NAM FILM SHOW 2025” என்ற திரைப்படக் கண்காட்சி நிகழ்வு, ஜூலை 23, 2025 இன்று கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வை இலங்கைக்கான வியட்நாம் தூதரகம் அழகாக ஏற்பாடு செய்திருந்தது. 1970-2025 வரையிலான இருநாடுகளின் பன்முக உறவுகளை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு நடந்தமை குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள், கலாசார வெளிப்பாடுகளின் மூலமாக இருநாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு அமைந்தது.
நிகழ்வில் முக்கிய அதிதிகளாக,
பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித் மற்றும் இலங்கைக்கான வியட்நாம் பிரதி தூதுவர் திரு லீ வான் ஹுவாங் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு, இருநாடுகளுக்கிடையிலான நட்பின் ஒரு புதிய அத்தியாயமாகவும், இரு மக்களுக்கும் இடையிலான கலாசாரப் பாலமாகவும், எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான தளமாகவும் திகழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.