(முஹம்மது)
கண்டி உடத்தலவின்ன ஹக்கீமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் றஸீன் (றஹ்மானி) அவர்களால் எழுதப்பட்ட “பெண்ணியம் காக்கும் புண்ணிய மார்க்கம் இஸ்லாம்” எனும் நூல், நாளை (ஜூலை 25) ,07:00pm மணியளவில் ஹக்கீமிய்யா அரபுக் கல்லூரியில் வெளியிடப்படவுள்ளது.
இந்த நூல், பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மதத்திற்கான பங்குகள் மற்றும் இஸ்லாமிய பார்வையில் பெண்ணியத்தின் முக்கியத்துவம் குறித்த விரிவான விளக்கங்களை முன்வைக்கின்றது. நவீன சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களுக்கு இஸ்லாமிய விளக்கத்தைத் தரும் சிறப்பான படைப்பாக அறிவியியலாளர்களால் பாராட்டப்படுகிறது.
இத்துடன், அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் றஸீன் (றஹ்மானி) அவர்களால் நிகழ்த்தப்பட்ட மார்க்க உபந்யாசங்கள், அல்ஹாபிழ் மிழ்பர் நழீர் அவர்களால் தொகுக்கப்பட்டு “வான் மறை வாழும் கலை வழிகாட்டி” என்ற தலைப்பில் தனி நூலாக நாளை வெளியிடப்படவுள்ளது.
இரண்டு நூல்களுமே இஸ்லாமிய அறிவுப் பரப்பலை விரிவுபடுத்தும் வகையில், மதப்பண்பாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதுடன், கல்வி, மார்க்க மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.