Top News
| முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் செயலமர்வு ஆரம்பம் | | இந்தோனேசியாவில் லெவோடோபி எரிமலை வெடிப்பு – மக்கள் அவதானத்தில்! | | அட்டாளைச்சேனை திண்மக்கழிவு சேகரிப்பு முகாமைத்துவ நிலையத்தில் தீ விபத்து |
Aug 3, 2025

மத்தளை அதிவேக நெடுஞ்சாலையை பொத்துவில் ஊடாக கல்முனை வரை நீடிக்க வேண்டும்-உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

Posted on July 24, 2025 by Admin | 106 Views

அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட மக்களின் பயண வசதிக்காக மத்தளை அதிவேக நெடுஞ்சாலையை பொத்துவில் ஊடாக கல்முனை வரை நீடிக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தியுள்ளார்.

இக்கோரிக்கை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டம் 2025 ஜூலை 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க தலைமையில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்தளை அதிவேக நெடுஞ்சாலை தற்போது அம்பாறை, மொனராகலை மக்களின் பயணத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நெடுஞ்சாலையை பொத்துவில் வழியாக கல்முனை வரை நீடித்தால், மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் பயனடைவார்கள். இதனால் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் வருமானம் அதிகரிக்கும் என்றும், கிழக்கு மாகாண அபிவிருத்தி மீதும் நேரடி தாக்கம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குருநாகல், தம்புள்ள உள்ளிட்ட பகுதிகளின் அதிவேக வீதிகள் முடிவடைந்த பின்னர், கிழக்குப் பகுதியில் இந்த திட்டம் முக்கிய முன்னுரிமையாக அமையவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, “மத்தளை–கல்முனை நெடுஞ்சாலை நீடிப்பு தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை எதிர்காலத்தில் திட்டமிடும்” என உறுதியளித்தார்.

நெடுஞ்சாலை நீடிப்பு பொதுப் போக்குவரத்து, வர்த்தக வளர்ச்சி மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.