(அபூ உமர்)
அம்பாறை மாவட்டத்தின் உகன மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள கல்வி வலயங்கள் தொடர்பான பிரச்சினைகள், மீண்டும் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம். எஸ். உதுமாலெப்பை, இன்று (24.07.2024) பாராளுமன்றத்தில் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரிடம் முக்கியமான கேள்விகளை முன்வைக்க உள்ளார்.
முக்கிய கேள்விகள்:
• உகன மற்றும் பொத்துவில் பிரதேசங்களுக்கு தனித்தனி கல்வி வலயங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் தனது பரிந்துரைகளை வழங்கியிருந்தார் என்பதை கல்வி அமைச்சர் அறிவாரா?
• இப்பிரதேசங்களுக்கு தனித்தனி கல்வி வலயங்கள் அமைக்கப்படுமா?
இவை குறித்து அமைச்சர் நேரடியாக பதிலளிக்குமாறு எம். எஸ். உதுமாலெப்பை எதிர்பார்க்கின்றார்.
உகன மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் தனித்தனி கல்வி வலயங்கள் இல்லாததால், அப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வி நிர்வாகங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றன. இத்தருணத்தில், இந்த பிரச்சனைக்கு தீர்வாக கல்வி அமைச்சின் உறுதியான நடவடிக்கைகள் அவசியமாக உள்ளன.