மாலைத்தீவு ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையிலே, எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 28) அன்று ஜனாதிபதி திசாநாயக்க மாலைத்தீவு விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.