முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர் பி. தயாரத்ன அவர்கள் 89ஆவது வயதில் காலமானார்.
1936 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் திகதி பிறந்த இவர், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அரசியலிலும், அரச சேவையிலும் பல ஆண்டுகளாக பணியாற்றிய அவர், 2001 முதல் 2004 வரை சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சராக பதவி வகித்தார். அவரது அமைச்சுப் பொறுப்புக்காலத்தில், நாட்டின் சுகாதாரத் துறை முக்கியமான பல முன்னேற்றங்களை கண்டது.
முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன அவர்களின் மறைவு நாட்டின் அரசியல் வரலாற்றில் ஓர் இழப்பாகக் கருதப்படுகிறது.