Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு உத்தியோகபூர்வமான வாகனங்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரிடம் உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

Posted on July 25, 2025 by Admin | 105 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, கடந்த 24 ஜூலை 2025 அன்று பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், பல முக்கியமான பிரதேச பிரச்சினைகளை முன்வைத்து அமைச்சின் நடவடிக்கையை கோரினார்.

அவர் குறிப்பிட்டதாவது, கிழக்கு மாகாணத்தில் உள்ள 20 பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் இல்லை என்பதும், சிலருக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் பழுதடைந்துள்ள நிலையில் அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இவர் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்டத்தில் காணிகளை சட்டவிரோதமாக வாங்கி கட்டிடங்கள் அமைத்து “சபாத் இல்லம்” எனும் பெயரில் செயல்படுகின்றனர். இது, சமூக அமைதிக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், அறுகம்பே உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய நீலாவணை முஸ்லிம் கிராமசேவகர் பிரிவு சென்ற 20.02.2001ம் திகதி 1172/8 இலக்கமுடைய அரச வர்த்தமானி ஊடாக பொது நிர்வாக அமைச்சில் அதி விசேட வர்த்தமானி மூலம் KP – 71/A எனும் கிராம சேவகர் பிரிவாக பிரகடனப்படுத்தப்பட்டு 24 வருடங்களுக்கு சென்ற பின்பும் மேற் குறித்த வர்த்தமானியானது அமுல்படுத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.எனவே இது தொடர்பான செயற்பாடுகளை பொது நிர்வாக அமைச்சு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்களை நியமனம் செய்யும் போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் சார்பில் பிரதேச செயலாளரும், சிறுபான்மையாக வாழும் மக்கள் சார்பில் உப பிரதேச செயலாளரும் நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் இனங்களுக்கிடையில் பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒற்றுமை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த பொது நிர்வாக மாகாண சபைகள் பிரதியமைச்சர் ருவான் செனரத்…..

கிழக்கு மாகாண பிரதேச சபைகளுக்கான வாகனங்கள் தொடர்பாகவும் ,எதிர்காலத்தில் பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாகவும் ,2001ம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகிய விடயங்களில் பொது நிர்வாக, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.