முன்னாள் சுகாதார அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தின் அனுபவமிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக பெயர் பெற்றிருந்த பி. தயாரத்னவின் மறைவுக்கு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் பி. தயாரத்னவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு நேரில் சென்ற எம். எஸ். உதுமாலெப்பை, அவருடைய குடும்பத்தினருடன் சந்தித்து இழப்பால் ஏற்பட்ட வேதனையை பகிர்ந்து கொண்டார். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும் உறுதுணையையும் வழங்கும் வகையில் நேரில் சென்று அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அமரர் தயாரத்ன, தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் மக்களுக்காக பல்வேறு துறைகளில், குறிப்பாக சுகாதாரத் துறையில், நினைவிலிருக்கும் பங்களிப்புகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.