ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இது தனது தனிப்பட்ட கருத்து எனத் தெளிவுபடுத்தினார். தேவையானால் ஹெலிகொப்டர் மூலமும் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பை அதிகரிப்பதை விமர்சிப்பது முட்டாள்தனமாகும் என்று தெரிவித்த அமைச்சர், நாட்டின் தலைமை பதவியில் இருப்பவர் தொடர்பான பாதுகாப்பு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.