ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸகுட்டி ஆரச்சி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக கடந்த காலத்தில் வழங்கிய அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிக்கத் தயார் என இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க, திஸகுட்டி ஆரச்சிக்கு எதிராக ரூ. 10 பில்லியன் இழப்பீட்டுத் தொகையை கோரி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, திஸகுட்டி ஆரச்சியின் சட்டத்தரணிகள் மூலமாக இந்த மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.