அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்கள், 2025 ஜூலை 29ஆம் திகதி ஒலுவிலில் அமைந்துள்ள அஷ்ரப் நகர திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இவ் விஜயத்தின் போது, அவர் அங்கு காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து, விரைவில் பிரதேச சபைக்கு வருமானம் தேடிக் கொடுக்கும் வகையில் கழிவுகளை உரமாக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கவசிமா இயந்திரத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்தார். அதேவேளை, களஞ்சியசாலைகள் மற்றும் சேவையில் பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பார்வையிட்டு, தற்போதைய நிலைமை பற்றி அதிகாரிகளிடம் இருந்து விளக்கங்கள் பெற்றார்.
பழுதடைந்து செயலிழந்த வாகனங்களை உடனடியாக பழுதுபார்த்து, திண்மக்கழிவு முகாமைத்துவ பணிகளை பயனுள்ள முறையில் முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.
இதன் போது பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.சி. நியாஸ், ஐ.எல். அஸ்வர் சாலி மற்றும் திண்மக்கழிவு பொறுப்பதிகாரி உத்தியோத்தர் ஏ.எம். இர்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.