(அபூ உமர்)
சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம், பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் நடைபெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரான எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம். ராபீ, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், மாவட்ட தலைமை பொறியியலாளர் ஏ. சாஹீர் உள்ளிட்ட பல துறை தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதேச அபிவிருத்தி திட்டங்கள், நிர்வாக சிக்கல்கள், எதிர்கால திட்டமிடல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.