வட்ஸ்அப் மூலம் பண மோசடி செய்யும் கோரமான முயற்சிகள் அதிகரித்து வருகின்றன என குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக பலர் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மோசடிக்குழுக்கள், அவர்களிடம் இருந்து வட்ஸப் OTP எண்களைத் திருடுகின்றன. இதன்பின், அவர்களின் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்கும் போலி செய்திகளை அனுப்பி, மேலும் மோசடி செய்து வருகின்றன என்ற தகவல்களும் விசாரணையில் வெளியாகியுள்ளது.
இத்தகைய மோசடிகளில் விழிப்புடன் இருக்க பொதுமக்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் OTP எண்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்,” என காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.