Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

Posted on August 1, 2025 by Admin | 217 Views

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, தற்போதுள்ள விலைகளிலேயே எரிவாயு கொள்கலன்கள் விற்பனை தொடரும் என நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் விலை விவரம் வருமாறு:

  • 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு கொள்கலன் – ரூ.3,690
  • 5 கிலோகிராம் எடையுள்ள கொள்கலன் – ரூ.1,482
  • 2.3 கிலோகிராம் எடையுள்ள கொள்கலன் – ரூ.694

விலை நிலையான நிலையில் தொடருவதாக அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம், சமையல் எரிவாயு விநியோகத்திலும் இடையூறு ஏற்படாது எனவும் உறுதி செய்துள்ளது.