கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், டியூட்டி ஃப்ரி வணிக நிலையங்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு செய்த உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடர்ந்து நாட்டை திரும்பிய போது நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்த அதிகாரிகள், விமான நிலையத்தில் விதிமுறைகளை மீறி கடைசியில் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.