அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள, உரிமையாளர் யு.எல்.சிறாஸ் அவர்களின் ‘AZAAZ Rice Stores’ நேற்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.S.M. உவைஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கடையைத் திறந்து வைத்துடன் பிரதேச சபை உறுப்பினர் கெளரவ ஏ.எல்.பாயிஸ்(ADE) ,தொழிலதிபர் ஐ.எல்.சஹீல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திறப்பு விழாவில், பலத்த வரவேற்பு மற்றும் உற்சாகத்துடன் வியாபாரிகள் கடை உரிமையாளர்கள், மில் உரிமையாளர்கள், பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அரிசி விற்பனை நிலையம், அட்டாளைச்சேனை மற்றும் சுற்றுவட்டார பிரதேச மக்களுக்கு நியாயமான விலையில் தரமான அரிசிகளை வழங்கும் என்றும், இப்பிரதேச மக்களுக்கு பயனளிக்கும் வர்த்தக முயற்சியாக இது அமைந்துள்ளது.