Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அட்டாளைச்சேனை திண்மக்கழிவு சேகரிப்பு முகாமைத்துவ நிலையத்தில் தீ விபத்து

Posted on August 2, 2025 by Admin | 194 Views

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் அஷ்ரப் நகரில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு முகாமைத்துவ நிலையத்தில் 31.07.2025ம் திகதி நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ பரவலுக்குப் பிறகு, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களினால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கையின் பிரகாரம், அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இத்தீயானது சுமார் இரண்டு நாட்களாக சிறிது சிறிதாக எரிந்து புகைந்த நிலையில் தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விபத்தில், அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜித், பிரதேச சபை செயலாளர் எல்.எம்.இர்பான், திண்மக்கழிவு முகாமைத்துவ பொறுப்பாளர் ஏ.எம். இர்பான், வேலைத்தள மேற்பார்வையாளர் Mr. மனாப் மற்றும் பாலமுனை இளைஞர்களும் தங்கள் சேவையை வழங்கி தீயணைப்பில் செயற்பட்டனர்.

தீயணைப்புப் பணிகள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. நள்ளிரவிலும் பொது மக்களின் நலனுக்காக முயற்சித்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச மக்களினால் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்பு பிரிவும், அதன் கௌரவ முதல்வர் ALM. அதாஉல்லா அவர்களுக்கும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் மக்கள் தனது நன்றிகளை தெரிவித்தனர்.