அவசர திருத்த பணிகள் காரணமாக, நாளை திங்கட்கிழமை (04.08.2025) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என நீர்வழங்கல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இக் காலப்பகுதியில் குடிநீர் வசதி வழங்க முடியாத நிலை இருப்பதால், குடிநீர் பாவனையாளர்கள் முன்கூட்டியே தேவையான அளவு நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்