Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வசதி

Posted on August 3, 2025 by Admin | 241 Views

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சுயவாகன ஓட்ட அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய வேலைத் திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் தங்கள் தனிப்பட்ட தேவைக்காக வாடகை வாகனங்களை இயக்கும் வசதியை எளிதாக்கும் நோக்கத்துடன், அவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். இதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய அலுவலகம் ஒன்று இன்று திறக்கப்படுகின்றது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • பண்டாரநாயக்க விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் பயணிகளுக்கே இத்திட்டம் வழங்கப்படும்.
  • உந்துருளி, முச்சக்கரவண்டி மற்றும் இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் கிடைக்கும்.
  • கனரக வாகனங்களுக்கு இதன் கீழ் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இந்த புதிய முயற்சி, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண அனுபவத்தை சிறப்பாக்கும் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.