அட்டாளைச்சேனை திசையிலிருந்து கல்முனை திசையை நோக்கி வந்த முச்சக்கரவண்டி ஒன்று, ஒலுவில் கழியோடை பாலத்தை கடந்தவுடன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது.
அந்த வண்டியில் நான்கு பிள்ளைகளுடன் பயணித்தவர்கள் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.