Pebbles Academy நிறுவனத்தின் முழுமையான அனுசரணையுடன் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய Lords Cricket Carnival 2025 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் அணி எதிரிகளைத் தகர்த்து, சாம்பியன் பட்டத்தையும் ரூபா 2,00,000 பணப்பரிசையும் கைப்பற்றியது.
மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் அணியும் சம்மாந்துறை டைட்டன்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தின.கடைசியில், சோபர் அணியின் அணியின் ஒற்றுமையும், வெற்றிக்கான ஆவலும் அவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது.
கே.எம். அக்ரம் தலைமையிலான சோபர் அணியில், எம். முபாரிஸ், ஆர். ரப்சான், மற்றும் எம். சாக்கீர் ஆகியோரின் அசத்தலான துடுப்பாட்டத்தால் ரசிகர்களின் மனங்களை வென்றனர். இவர்களின் அர்ப்பணிப்பும், ஆட்ட நுணுக்கமும் அணியின் வெற்றிக்கு தூணாய் இருந்தன. கடந்த பல ஆண்டுகளாகவே அட்டாளைச்சேனை சோபர் அணி கிரிக்கெட்டில் தொடர்ச்சியான சிறப்பை பதிவுசெய்து, அட்டாளைச்சேனை மண்ணையும் மக்களையும் பெருமைப்படுத்தி வருகிறது.
வெற்றிக்கிண்ணம் வழங்கும் வைபவத்தில், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வரும் முன்னாள் அமைச்சருமான திரு ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றிக்கிண்ணத்தை சோபர் அணிக்கு வழங்கினார். இவருடன் Pebbles Academy நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இன்சாப் சரிபுதீன் அவர்களும் இணைந்திருந்தார்
தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் சோபர் அணிக்கு வாழ்த்துக்கள்