நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து வெளியிடும் manthri.lk இணையதளத்தின் சமீபத்திய தரவரிசையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதலிடத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் பிடித்துள்ளார்.
இத்தரவரிசை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டது. முஸ்லிம் உறுப்பினர்களுக்கான சிறந்த மூன்று இடங்களில் முறையே ரவூப் முஜிபுர் ரஹ்மான் 1ம் இடத்தையும், ரவூப் ஹக்கீம் 2ம் இடத்தையும் , நிஸாம் காரியப்பர் 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
முஸ்லிம் உறுப்பினர்களின் தரவரிசை:
பெயர் | தரவரிசை (மொத்த 225) |
ரவூப் முஜிபுர் ரஹ்மான் | 16 |
ரவூப் ஹக்கீம் | 18 |
நிஸாம் காரியப்பர் | 21 |
எஸ்.எம். மரிக்கார் | 27 |
இம்ரான் மகரூப் | 37 |
கபீர் ஹஷீம் | 56 |
ரிஷாத் பதியுதீன் | 57 |
எம்.எஸ். உதுமாலெப்பை | 58 |
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா | 64 |
முனீர் முழப்பர் | 76 |
எம்.ஏ.எம். தாஹீர் | 88 |
பைஸர் முஸ்தபா | 97 |
கே. காதர்மஸ்தான் | 99 |
எம்.கே.எம். அஸ்லம் | 104 |
முஹம்மது பைசல் | 130 |
அர்கம் இல்யாஸ் | 172 |
இ. முத்து முஹம்மது | 186 |
ரிஸ்வி சாலிஹ் | 198 |
பஸ் மின் செரீப் | 200 |
அபூபக்கர் ஆதம்பாவா | 205 |
ரியாஸ் பாறூக் | 212 |
திகாமடுல்ல மாவட்ட நிலவரம்:
திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில்,
நிஸாம் காரியப்பர் (முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம்) முதலிடத்தில் உள்ளார். நாடளாவிய தரவரிசையில் இவர் 21வது இடத்தில் உள்ளார்.,
இரண்டாமிடத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை (முஸ்லிம் காங்கிரஸ்) – நாடளாவிய தரவரிசையில் இவர் 58வது இடம்
மூன்றாமிடத்தில் எம்.ஏ.எம். தாஹீர் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) – நாடளாவிய தரவரிசையில் இவர் 88வது இடம்
நான்காவதிடத்தில் அபூபக்கர் ஆதம்பாவா (தேசிய மக்கள் சக்தி – தேசிய பட்டியல்) – நாடளாவிய தரவரிசையில் இவர் 205வது இடம் ஆகியோர் தத்தமது மாவட்டத்தில் ஒவ்வொரு இடங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த தரவரிசைகள், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கலந்துகொள்வது, உரையாற்றல், விவாதங்களில் ஈடுபாடு மற்றும் சட்டமூலங்களில் பங்களிப்பு போன்ற கருதுக்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டதாக manthri.lk தெரிவிக்கிறது.