(குரு சிஷ்யன்)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல், 2025-ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா, பாடசாலை ஒழுக்காற்று குழு ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில், பாடசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி A.L. நஸீபா இக்பால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, EPSI இணைப்பாளராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றும் திருமதி B. ஜிஹானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக, பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.L. அப்துல் மஜீத், பாடசாலை பிரதி அதிபர்கள் M.A. ஸலாகுதீன், N.M.M. ஸாலிஹ் மற்றும் முன்னாள் பிரதி அதிபர் இக்பால் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும், பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களான IH. வஹாப் மற்றும் J. அஷ்பாக் ஆகியோரும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.
இந்த நிகழ்வில், 67 மாணவர்கள், மாணவர் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இது போன்ற நிகழ்வுகள், மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை ஊக்குவிக்கும் களமாக அமையும்.