முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற பின்னர் காணாமல் போன இளைஞன், இன்று (சனிக்கிழமை) அதிகாலை முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இளைஞன் காணாமல் போனதைத் தொடர்ந்து, தொடர்புடையவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், ஊர்மக்களும் பரவலான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காலை நேரத்தில் நடத்தப்பட்ட தேடுதலில், இளைஞனின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஐந்து இராணுவத்தினரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.