Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி நனைந்த பொத்துவில் மண்

Posted on August 9, 2025 by Admin | 106 Views

(அபூ உமர்)

பொத்துவில் பிரதேசம் வெள்ளிக் கிழமை (08) மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி நனைந்து அரசியல் கொண்டாட்டத்தில் மிளிரியது.

பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். வாசித் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். எம். எம். முஷாரப்பை வாழ்த்தி கௌரவிக்கும் “பேரெழுச்சிப் பெருவிழா” மிகப் பிரமாண்டமாக
பொத்துவில் ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் முகைதீன் பாவா மௌலவி அவர்களின் தலைமையில் கடலின் நீலத்துடன் கடற்காற்றின் வாசத்துடன் பொத்துவில் மண்ணில் நடைபெற்றது.

விழாவில், கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நழீம் உள்ளிட்ட கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நலன் விரும்பிகள் பங்கேற்றனர்.

பொதுமக்களின் பெரும் திரளால் சிறப்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, பொத்துவில் அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லாக பதிவாகும் வகையில் பெருமைக்குரிய ஒரு நாளாக அமைந்தது.