GovPay கட்டமைப்புடன் மேலும் 50 அரசு நிறுவனங்களை இணைக்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருணி ஸ்ரீ தனபால தெரிவித்ததாவது, செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய இந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
GovPay திட்டத்தின் விரிவாக்கம் மூலம் பொதுமக்கள், பல்வேறு அரசு சேவைகளை ஆன்லைன் வழியாக விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தும் வசதியை பெறுவார்கள்.