Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

தேசிய விருதில் முதலிடம் பெற்ற அட்டாளைச்சேனை இளைஞன் என்.இம்றான்

Posted on August 11, 2025 by Admin | 194 Views

அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பாறை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் என். இம்ரான், தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த தொழில் தள பயிற்சியாளர் விருதில் முதலிடம் பெற்று ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 30 பேரில் முதலிடம் பிடித்த இம்ரான், “சிறந்த பயிற்சியாளர் விருது” பெற உள்ளார். இந்த விருது, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் கொரிய அரசாங்கத்தின் KOICA இணைந்து செயல்படுத்தும் Career 1 தேசிய திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் முக்கிய நிகழ்வு 2025 ஆகஸ்ட் 13ஆம் திகதி, கொழும்பு Waters Edge ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் முதல் 11 பேருக்கு “சிறந்த பயிற்சியாளர்” விருது மற்றும் மீதமுள்ள 19 பேருக்கு “அர்ப்பணிப்பு பயிற்சியாளர்” விருது வழங்கப்பட உள்ளது.

25 வயதான இம்ரான், தனது இளம்வயதில் தொழில்நுட்பக் கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். அக்கறைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் National Certificate in Engineering Draftsmanship மற்றும் அம்பாறை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரியில் National Diploma in Construction Technology போன்ற படிப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்த விருது, அட்டாளைச்சேனை மக்களுக்கும், தொழில்நுட்பக் கல்வியை நோக்கி முன்னேறும் இளம் தலைமுறைக்கும் ஒரு ஊக்கமாக திகழ்கிறது.

இம்ரானுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!