Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆலோசனை

Posted on August 11, 2025 by Admin | 78 Views

(அபூ உமர்)

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், கல்முனை முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்குமிடையிலான கலந்துரையாடல் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்று (11.08.2025) பள்ளிவாசல் காரியாலயத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், காத்தான்குடி நகரசபையின் நகர பிதா எஸ்.எச்.எம். அஸ்பர், பள்ளிவாசல் நிருவாகக் சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.