மொரகல்ல கடற்கரையில் இன்று (11) காலை நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாம் நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலின்படி, அந்தப் பெண் நண்பர்கள் குழுவுடன் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது பலத்த அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் தேடுதல் நடவடிக்கையின் போது, அவரது உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.