Top News
| இலங்கையில் ஒரே நாளில் 13000 ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை | | வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை | | போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி |
Mar 19, 2026

2025 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

Posted on August 12, 2025 by Admin | 335 Views

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நாள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்கள் மற்றும் முன்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் விண்ணப்பிக்க முடியாதவர்கள், இன்று (12) நள்ளிரவு வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இதற்கான வசதி இணையத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் விண்ணப்பிப்பது கட்டாயம் எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.