Top News
| ஈரானுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை | | இன்று முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் | | பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு |
Mar 19, 2026

பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

Posted on August 12, 2025 by Admin | 205 Views

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம். றுஸ்வின் அவர்களின் கோரிக்கைக்கமைய, பூநெச்சிமுனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இன்று (11) களவிஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர்கொள்ளும் ஆழ்கடல் மீனவ படகுகளை பழுது பார்த்தல், மீன்களை ஏற்றி இறக்கல் மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நேரடியாக கண்காணித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளையும் உள்வாங்கிக்கொண்டார்.

மேலும், மீனவர்களின் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

– ஊடகப்பிரிவு-