நாட்டின் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
அதிகாரசபை வருடாந்தம் வெளியிடும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருப்பது, சமூகத்தில் கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.