Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

மக்களின் காலடிக்குச் சென்று பிரச்சினைகளை அறியும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு அட்டாளைச்சேனையின் தைக்காநகரில் ஆரம்பம்

Posted on August 14, 2025 by Admin | 358 Views

(அபூ உமர்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வட்டார ரீதியில் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை அறியும் மக்கள் காலடிக்குச்செல்லும் திட்டத்தின் முதலாவது சந்திப்பினை தைக்காநகர் வட்டாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் பற்றிய விசேட கலந்துரையாடல் நேற்று (13.08.2025) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது.

கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ். எம். எ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ. சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ். எம். ரியாஸ், தைக்காநகர் வட்டார பட்டியல் வேட்பாளர் மற்றும் தைக்காநகர் முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.