Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இலங்கையில் திருமணம் செய்வதற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

Posted on August 15, 2025 by Admin | 325 Views

தலசீமியா நோயை கட்டுப்படுத்த, திருமண வயதுடைய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனை (Full Blood Count) மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள்) சம்பிகா விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

மரபணு வழியாகப் பரவும் இந்த நோய், தலசீமியா நோயாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்வதைத் தவிர்த்தால், இலங்கையிலிருந்து முற்றிலும் ஒழிக்கக்கூடியது என அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கை மக்கள் தொகையில் 10% பேர் இந்த மரபணுவைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 2,000 தலசீமியா நோயாளிகள் உள்ளனர். தேசிய சுகாதார செலவில் 15% இந்நோய்க்கான சிகிச்சைக்காகவே ஒதுக்கப்படுகிறது.

ஒரு நோயாளியின் வருடாந்த சிகிச்சை செலவு ரூ.10 மில்லியனை கடந்துவிடுகிறது. எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஓரு நோயாளிக்கு ரூ.40 மில்லியனை கடந்துவிடும்.

குருநாகல், அனுராதபுரம், பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் தலசீமியா நோயாளிகள் 100க்கு மேற்பட்டோர் பதிவாகியுள்ளனர். நாட்டில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 60 குழந்தைகள் தலசீமியாவுடன் பிறக்கின்றனர்.