பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குள் கடை காரியாலய ஒழுங்குபடுத்தல் சட்டம் (சாப்புச்சட்டம்- shop law) நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2025 ஆகஸ்ட் 15 அன்று மாலை 4.00 மணிக்கு பொது நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கௌரவ தவிசாளர் எஸ். எம். எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 15 முதல் சாப்புச்சட்டம் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரும் என்றும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ உறுப்பினர்களான யூசுப் முஹைடீன், ஏ.எல். ஜெம்ஸித் ராபி, ஜே. எப். இஜாஸ் அஹமட், டி. ஜெயராம், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. ஏ. பி. குமாரசிங்க, சர்வ மத தலைவர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.