சமூக நல்லிணக்கத்திற்கும் தேசப் பாதுகாப்பிற்கும் ஒரு முன்மாதிரியாக, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இலங்கை இராணுவத்தில் இணைந்து பெருமை சேர்த்துள்ளார்.
தெய்யத்தகண்டிய ஹென்னானிகலவில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் ஆறு மாதங்கள் கடுமையான அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 360 வீரர்கள் நேற்று (ஆகஸ்ட் 15) அதிகாரப்பூர்வமாக இராணுவ வீரர்களாகப் பொறுப்பேற்றனர்.
இவர்களில், சம்மாந்துறை சென்னல் கிராம் – 01 பகுதியைச் சேர்ந்த நிசார்ந்தின் (பைசால்) அவர்களின் புதல்வன் N. அஸ்கி சிஹாப் தனது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம், தேச சேவைக்கான தனது உறுதியை வெளிப்படுத்தியுள்ள அவர், சம்மாந்துறை மண்ணின் பெருமையை உயர்த்தியுள்ளார்.
அஸ்கி சிஹாபின் இந்த சாதனை, அந்தப் பகுதி இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் எடுத்துக்காட்டாகவும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தேச சேவைக்கான இவரது உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி, மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.