இந்த ஆண்டு இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 37 பெண்களும், 220 ஆண்களும் அடங்குவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.