Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரன் முஹம்மட் Edinborough நிறுவனத்தின் சிறந்த விற்பனை பிரதிநிதி விருதினைப் பெற்றார்

Posted on August 17, 2025 by Admin | 74 Views

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஐ. முபாரன் முஹம்மட், Edinborough Product Pvt Ltd நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் சிறந்த விற்பனை பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு Gold Winner Award மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயண சீட்டு (Bangkok, தாய்லாந்து) வழங்கப்பட்டது.

மேலும், அவரது சிறப்பான தொழில் பங்களிப்பை மதிப்பீடு செய்து, அவருக்கு Area Sales Supervisor பதவியுயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

தொழிலில் காட்டிய அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, மற்றும் நிறுவனம் மீதான விசுவாசத்திற்காக முபாரன் முஹம்மட் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.